search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பேரணி"

    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதா பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு (நெகிழி) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் வரவேற்று பேசினார். ஆசிரியை தமிழரசி தலைமை தாங்கினார். இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆசிரியை ஜெயராணி, தேசிய பசுமைப்படை சாந்தி மோசஸ் சாரண சாரணியர் இயக்கம் மோசஸ் முன்னிலை வகித்தனர்.

    இதில் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் உதவி தலைமை ஆசிரியைகள் வெங்கடலட்சுமி, ரெஜினா தெரசாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார். பேரணி கோவிலூற்று, மாதாபட்டணம் பகுதியில் நடைபெற்றது. துணிப்பையை பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி சாமி வழங்க வார்டு உறுப்பினர் குருசாமி பெற்றுகொண்டார். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார் . நிகழ்ச்சியை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ் , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
    • பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.

    நாகப்பட்டினம்:

    பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

    திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது.

    கன்னியாகுமரி :

    8-வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பேரணியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளையை சென்றடைகிறது

    • பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    பவானி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் போன்ற வற்றினை செய்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் அந்த அந்த வாக்குச்சாவடி முகாமிற்கு சென்று விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதனை த்தொடர்ந்து பவானி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் மூலம் முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    இந்த பேரணியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாள வேண்டும்?
    • சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தொடங்கி வைத்தார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியின் சிறப்பு நிகழ்ச்சியாக டெங்கு எதனால் பரவுகிறது? டெங்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாள வேண்டும்? என்னும் கருப் பொருளில் நோக்கவுரை வழங்கப்பட்டது.

    அதோடு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் மையச்சிந்தனையை மாணவர்கள் உணர்ந்து டெங்கு ஒழிப்பு பற்றிய பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு விழிப்பு ணர்வு கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிகழ்வானது மாண வர்கள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வும், தண்ணீரை தேங்கவிடா மல் இருக்கவும், காய்ச்சிய நீரை மட்டுமே பருகவும், சத்தான உணவுகளை உட் கொள்ளவும், கொசுக்கள் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும், போன்றவற்றை தெளிவு படுத்தும் விதமாகவும், மேலும் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
    • நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    தாரமங்கலம்:

    வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு

    ராகி, கம்பு, சோளம் குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பயிரிடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதனை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

    இதில் விவசாயிகள் சிறுதானிய உணவு வகை பயிர்களை நன்கு பராமரிக்க நுனி கிள்ளுதல், யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் கஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் கோபி, வேளாண் அலுவலர்கள் சதீஷ் பாபு. செல்வி, தில்லைக்கரசி, தொழில்நுட்ப மேலாளர் அகிலா மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷப்பர்ட் பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டது.

    பின்னர் தெரு தெருவாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராமலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி பரமசிவன், மொன்னா முகம்மது இர்சாத், முகைதீன் அப்துல் காதர், பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.
    • ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், குமாரபாளையம் போலீஸ் நிலையம், குமாரபாளையம் தாலுகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த விழிப்புணர்வு பேரணியானது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியில் தொடங்கி ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட பிரதான சாலை வழியாக குமாரபாளையம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    விழிப்புணர்வு

    இந்த பேரணியினை வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

    பேரணி குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுதல் கூடாது. சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுத்து அதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது என்றார்.

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்

    காரைக்குடி

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை காரைக் குடியில் நடத்தினர்.நெடுஞ் சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை, உதவி கோட்டப் பொறியாளர் அரிமுந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலை வர் முத்துதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத் தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேர ணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்தி நகரில் வலம் வந்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பூமிநாதன், சாலை ஆய்வாளர்கள், பணியா ளர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    நெல்லை:

    நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.


     


    • கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டு முழுமைக்குமான "நம்ம ஊரு சூப்பரு" இயக்க சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்வது தொடர்பான செயல்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி மற்றும் இதர அலுவலக சுகாதார பணியாளர்களை இணைக்க வேண்டும்.

    மக்களைத்தேடி மருத்துவம் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து தோட்டங்கள், மரம் நடுதல், பசுமை தோட்டங்கள் அமைத்தல் மூலம் கிராமத்தினை பசுமையான கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தூய்மை பாரத இயக்க-சுகாதார செய்திகளை கிராமிய கலை மூலம் ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்தி தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீடுகள் அளவில் குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை கடைகள் மற்றும் வியாபார தலங்களில் பயன்பாட்டினை தடை செய்தல், நெகிழிக்கு மாற்று பயன்பாட்டினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பட்டறிவு பயணம் மூலம் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    இந்த செயல்பாடுகளில் ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என பல்வேறு துறைகளை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து பகுதி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
    • நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை நெடுஞ்சாலைத் துறை கோபி கோட்ட பொறியாளர் ஜெய லட்சுமி தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு வேண்டும் உள்ளிட்ட வசங்களுடன் பதாகைகளை ஏந்தி நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.

    பேரணியில் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் விஜய லட்சுமி, கதிர்வேல், உதவி பொறி யாளர்கள் சந்தோஷ், வேந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியா ளர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×